தமிழகத்தின் 2026 க்கான நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘உங்க விஜய் நான் வரேன், மக்கள் சந்திப்பு பிரசாரம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை கடந்த 13-ந்தேதி முதல் தொடங்கி உள்ளார். இந்த பிரசாரம் பெரும்பாலும், சனிக்கிழமை நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட சுற்றுப்பயணம் திருச்சியில் இருந்து தொடங்கினர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று அவர் பிரசாரம் செய்ய உள்ளார். 2-கட்ட பிரசாரத்தை நாகையில் விஜய் {செப் 20}மேற்கொண்டார். இதற்கிடையே, விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களில் மின்தடை என அறிவிப்பு வெளியாகியது.
விஜய் பிரச்சாரம் செய்யும் நேரத்தில் மற்றும் அந்த பகுதியில் மின்தடையை அறிவிக்க வேண்டும் என தவெக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது நிலையில் அதனை ஏற்று மின் துண்டிப்பு அறிவிக்கப்பட்டிருந்தது, விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் பொழுது ரசிகர்கள் மின்கம்பங்கள் மற்றும் மரங்களில் ஏறி பார்ப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் நேரக்கூடாது என்ற வகையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாம்
ஆனால் விஜய் பிரச்சரத்தில் பேசியதில் “பிரசாரத்துக்கு எத்தனை இடையூறுகள்? அஞ்சு நிமிஷம் தான் பேசணும்; பத்து நிமிஷம் தான் பேசணும் என்று. நான் பேசுவதே 3 நிமிடம். அதில் இதை பேசக் கூடாது என்றால் நான் எதை தான் பேசுவேன்? பிரதமர் வந்தால் இத்தனை கட்டுப்பாடுகள் இருக்குமா? பிரசாரம் சென்றால் மின்தடை செய்கின்றனர்.
ஸ்பீக்கர் வயரைக் கட் பண்ணுறாங்க, மக்களைப் பார்த்து சிரிக்கக் கூடாது. மக்களைப் பார்த்து கையசைக்கக்கூடாது எனக் கட்டுப்பாடுகள்; எங்களுக்கு மட்டும் அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். செம்ம காமெடியாக இருக்கிறது” என்று பேசினார்.
குறிப்பாக மின் வெட்டை குறித்து பேசியது தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதாவது தவெகவினரின் கோரிக்கையை ஏற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால் தவெக தலைவர் விஜய் மின் வெட்டுக்கு திமுகவினரே காரணம் என்று பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஒரு வேளை நிர்வாகிகள் விடுத்த கோரிக்கையை பற்றி தவெகவின் தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லையா என்று மற்றொரு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
