மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றிக்கழகம் மொத்தம் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேபோல் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகத்தின் 2 வேட்பாளர்களுடன் சேர்த்து மொத்தம் 30 வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய விஜய்க்கு போலீசார் அனுமதி வழங்கினர்.

இந்த நிலையில், விஜய் இன்று புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தவளகுப்பம் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின் போது, மணவெளி தொகுதி தவெக வேட்பாளர் ராமு என்பதற்குப் பதிலாக தவறுதலாக பா.ஜ.க. வேட்பாளரும் சபாநாயகருமான செல்வம் என கூறினார். இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அருகில் இருந்த வேட்பாளர் தன் பெயர் ராமு என்று நினைவூட்டியதும், விஜய் உடனே திருத்தி “வேட்பாளர் ராமு” என்று கூறினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்பும் இதுபோன்ற தவறு நிகழ்ந்துள்ளது. கொளத்தூர் தொகுதியில், வேட்பாளர் வி.எஸ். பாபுவுக்கு பதிலாக “பிரபு” என்று தவறாக கூறிய விஜய், பின்னர் “நான் வேறு அவர் வேறு அல்ல, விசில் சின்னத்திற்கு உங்கள் வாக்கை அளிக்கவும்” என்று பேசியிருந்தார்.

இந்த இரண்டு சம்பவங்களும் கட்சி தொண்டர்களிடையே ஆச்சரியத்தையும் சிறிய அதிருப்தியையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

Related News

Latest News