ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ’ஜனநாயகன்’. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் கொடைக்கானலில் நடைபெற்றது. இதற்காக கடந்த மே 1-ம் தேதி விஜய் மற்றும் படக்குழுவினர் அங்கு சென்றனர்.
இந்நிலையில், கொடைக்கானலில் ’ஜனநாயகன்’ படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் விஜய் அங்கிருந்து கார் மூலம் மதுரை புறப்பட்டார். இதையடுத்து மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் சென்னை திரும்பினார்.