கடந்த 27ஆம் தேதிசனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து த.வெ.க. சமூக வலைத்தள நிர்வாகிகள் மீதும் வழக்குகள் பாய்ந்தன.
கடந்த 3 நாட்களாக எந்த பேட்டியும் கொடுக்காமல் இருந்து வந்த விஜய், கரூர் சம்பவம் தொடர்பாக நேற்று தனது மனம் திறந்து பேசினார். நடந்த சம்பவம் குறித்தும், தனது அடுத்தக்கட்ட அரசியல் பயணம் குறித்தும் விஜய் சமூக வலைதள பக்கத்தில் பரபரப்பான வீடியோ ஒன்றை பதிவு செய்தார்.
அந்த வீடியோவில் கரூரில் எங்களுக்கு தரப்பட்ட இடத்தில்தான் பேசினோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று விஜய் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இந்த நிலையில் தற்போது தவெக தலைமை நிலையச் செயலகம் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.