காரைக்குடியில் எதுவும் பேசாமல் சென்ற விஜய் : ஏமாந்துபோன தவெக தொண்டர்கள்

தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) காரைக்குடியில் மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரம் முடிவடைந்ததால் காரைக்குடி வந்த விஜய் எதுவும் பேசாமல் திரும்பி சென்றுள்ளார். இதனால் அவரை காண ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related News

Latest News