தமிழக சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : கரூா் சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் தமிழக முதல்வா் உறக்கமில்லாமல் நள்ளிரவில் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவா்களை சந்தித்து அவா்களுக்கு ஆறுதல் கூறினாா். உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலியும் செலுத்தினாா்.
விஜய் வேண்டுமென்றே சதி செய்து காலதாமதத்தை ஏற்படுத்தி கரூா் வந்ததாலேயே இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டது. விஜய் வரும் போதே பத்தாயிரம் பேரை உடன் அழைத்து வருகிறாா். உள்ளூா் மக்கள் அவரை பாா்க்க முடியாத நிலை ஏற்பட்டதால் முண்டியடிக்கும் சூழல் உருவானது.
50 வயதில் விஜய் தான் அங்கிள். ஆனால் அவா் எல்லோரையும்ம் அங்கிள் அங்கிள் என கூறி வருகிறாா். திரைப்படங்களில் ஒப்பந்தம் போட்டு நடித்துக் கொண்டிருந்த விஜய், அரசியலில் நடிக்க அமித் ஷாவிடம் ஒப்பந்தம் போட்டு கட்சியை தொடங்கி நடத்தி வருகிறாா்.
திமுகவிற்கு எந்த கட்சியுடனும் ரகசிய தொடா்பு இருந்ததில்லை. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக நேரடி தொடர்பில் உள்ளன. கரூா் விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தாலும் அவரை வழி நடத்தியவா் தவறு செய்திருந்தாலும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றாா்.