Sunday, January 25, 2026

‘எம்.ஜி.ஆருக்கு பிறகு செல்வாக்கு மிக்க தலைவராக விஜய் உள்ளார்’ – செங்கோட்டையன் பேச்சு

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலை சந்திக்க த.வெ.க.வும் தீவிரமாக இறங்கியுள்ளது. நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் புதிதாக களம் காண இருக்கிறது.

இந்தநிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் என்பதால், மேடையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதையடுத்து த.வெ.க. நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் கூறியதாவது:

தமிழ்நாட்டில் தி.மு.க.வை வீழ்த்தும் சக்தி கொண்ட ஒரே தளபதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்தான்.

கூட்டணிகளை தூளாக்கும் சக்தி த.வெ.க. தலைவர் விஜய்க்கு மட்டும் தான் உண்டு.

தி.மு.க., அ.தி.மு.க.வில் இருப்போர் தலைவர்களே இல்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு செல்வாக்கு மிக்க தலைவராக விஜய் உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Latest News