விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகமெங்கும் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கைச் சான்றிதழ் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. இதனால் படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு, “ஜனநாயகன் தனது கடைசி படம் என்பதால் விஜய் பில்டப் செய்கிறார். ரசிகர்களை கொதிநிலையில் வைத்திருக்க இந்த பில்டப் செய்யப்படுகிறது.
ஆந்திராவில் சினிமா படம் பார்க்கச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அந்த விவகாரத்தில் சினிமா நடிகர் கைது செய்யப்பட்டார். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகியுள்ளனர். எனவே சட்டம் தனது கடமையைச் செய்யும்” என்றார்.
