தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலை சந்திக்க த.வெ.க.வும் தீவிரமாக இறங்கியுள்ளது. நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் புதிதாக களம் காண இருக்கிறது.
இந்தநிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில் விஜய் கூறியதாவது: தி.மு.க.வுக்கு முன்னாடி தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் பா.ஜ.க. அடிமையாக தான் இருக்கிறார்கள்.பா.ஜ.க.வுக்கு தி.மு.க. மறைமுகமாக சரண்டர் ஆகி உள்ளது. த.வெ.க. வந்த பிறகு ஊழல் செய்ய மாட்டேன். செய்யவும் விட மாட்டேன் என பேசினார்.
இதனை தொடர்ந்து, கட்சியின் சின்னமான விசில் சின்னத்தை மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். இதனை கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
