திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதுச்சேரி முதலமைச்சரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய பொன்முடி, த.வெ.க. தலைவர் விஜய் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இப்போது தான் அவர் வந்து இருக்கிறார். ஒரு மீட்டிங் போட்டவுடன் எது வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் கற்றுக்கொள்ள வேண்டியதே நிறைய இருக்கிறது.
கரூர் மக்கள் அளித்த பாடத்தில் கற்றுக்கொண்டு, இப்போது அவர் டயத்துக்கு வந்து டயத்துக்கு சரியாக போகிறார் என்றால் இப்போது தான் கொஞ்சம் பாடம் கற்றுக்கொண்டு உள்ளார். விஜய் எல்.கே.ஜி. படிச்சிட்டு இருக்காரு. வரட்டும் அவர் வரும்போது பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
