தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் கரூரில் கடந்த செப். 27-ஆம் தேதி பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த அசம்பாவித சம்பவம் காரணமாக, விஜய்யின் பிரசாரம் சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சேலத்தில் இருந்து அவருடைய பிரசாரம் பயணம் மீண்டும் தொடங்கப்போவதாக தகவல் வெளியான நிலையில்,அதற்கு அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
அதில், டிச. 4-ஆம் தேதி சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு விஜய் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனா்.
