புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகு திகளுக்கு வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. மே 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி மார்க்கெட் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை விஜய் வெளியிட்டுள்ளார்.
தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் :
துணைநிலை ஆளுநரின் தலையீடு இல்லாத முழுமையான மாநில அந்தஸ்தை பெற சட்டப்படி 100 சதவிகிதம் முயற்சிப்போம்.
தவெக ஆட்சி அமைந்த 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும்.
மகப்பேறு உதவித்தொகையாக ரூ. 25,000 வழங்கப்படும்.
அனைத்து அரசுப் பணிகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
100 சதவிகித பயிர்க் காப்பீடு வழங்கப்படும்.
மீன்பிடிக்கச் செல்வோருக்கு லிட்டருக்கு ரூ. 20 மானியம் டீசலுக்கு வழங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 25 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட்வரை கட்டணமின்றி மின்சாரம் வழங்கப்படும்.
காரைக்கால் மாஹே, ஏனாம் மாஹே பகுதிகளில் 25 சதவிகித வளர்ச்சி செலவினங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.
