Saturday, December 27, 2025

‘இது என்ன பைத்தியக்காரத்தனம்’.., பிரேசில் மாடல் அழகி வெளியிட்ட வீடியோ

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் தேர்தல்களில் மிகப்பெரிய அளவில் வாக்கு திருட்டு நடந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இது தொடர்பாக ‘ஹெச் பைல்ஸ்’ (H Files) என்ற பெயரில் பல்வேறு ஆதாரங்களை நேற்று ராகுல் காந்தி வெளியிட்டார்.

ராய் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ஒருவரின் புகைப்படம் 10 வாக்குச்சாவடிகளில் 22 இடங்களில் இடம்பெற்று உள்ளதை அவர் குறிப்பிட்டார். இதையடுத்து ராகுல் காந்தி குறிப்பிட்ட அந்த பிரேசில் மாடல் அழகி லாரிசா ரோச்சா சில்வா குறித்து இணையத்தில் பலரும் தேடத் தொடங்கினர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- “இந்திய அரசியலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னுடைய புகைப்படம் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டு, எனது உடன்பாடு இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான் இந்தியாவுக்கு சென்றது கூட இல்லை.

அந்த புகைப்படத்தில் எனது வயது 18 அல்லது 20 இருக்கும் என நினைக்கிறேன். மக்களை ஏமாற்றுவதற்கு எனது பழைய புகைப்படத்தை சிலர் பயன்படுத்தியதாக தெரிகிறது. இது என்ன பைத்தியக்காரத்தனம்? எப்படிப்பட்ட உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது நான் அல்ல, அது என்னுடைய புகைப்படம் மட்டுமே. உங்கள் மொழி எனக்குத் தெரியாது, ஆனால் உங்களுக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

Related News

Latest News