Wednesday, January 14, 2026

கையில் பாம்பு வைத்துக்கொண்டு வீடியோ….மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகிவிட்டது. கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் அருகே பைக் சாகசம் செய்த போது விபத்து ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறி பைக்கில் அதிவேகமாக செல்வது தொடர்பாக அவர் மீது பல வழக்குகள் பதிவாகின. அவருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாம்பு ஒன்றை தனது கையில் சுத்தியப்படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை மகராஷ்டிராவில் உள்ள காட்டில் இருந்து கொண்டு வந்ததாக கூறி உள்ளார். இரண்டு வயது ஆகப்போகும் அந்த பாம்பிற்கு, தாயாகவும், தந்தையாகவும் தானே உள்ளதாக டிடிஎஃப் வாசன் கூறி உள்ளார். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் வனத்துறை அதிகாரிகள் டிடிஎஃப் வாசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News