Monday, June 2, 2025

விடாமுயற்சி படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் பிப்ரவி 6 ஆம் தேதி ஒருநாள் மட்டும் 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ள திரையரங்குகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. முதல் காட்சியை காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news