கன்னட மூத்த நடிகர் ‘ஸ்ரீகண்டய்யா உமேஷ்’ உடல்நலக் குறைவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 80.
கடந்த 1945ஆண்டு மைசூரில் பிறந்த உமேஷ், நான்கு வயதில் ‘லஞ்சாவதாரம்’ புகழ் மாஸ்டர் கே ஹிரண்ணையாவின் நாடகக் குழுவில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.1960 ஆம் ஆண்டு வெளியான ‘மக்கல ராஜ்ஜியம்’ திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.
இவர் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னட நடிகர் ராஜ்குமார், விஷ்ணு வர்தன், அம்பரீஷ் என அனைத்து முன்னணி கன்னட நடிகர்களுடனும் நடித்துள்ளார். நடிப்பிற்காக கர்நாடக மாநில அரசின் திரைப்பட விருது உள்ளிட்ட பல்வேறு விருகளையும் வென்றுள்ளார்.
நீண்ட காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் உமேஷ் அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் இன்று காலமானார்.
