தமிழ்நாடு சட்டப்பேரவையில், அமைச்சர் துரைமுருகன் மற்றும் சபாநாயகர் அப்பாவுவுடன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய வேல்முருகன், அந்தியூர் – பவானி தொகுதி மக்களுக்கு காவிரி உபரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பவானியை தொகுதிக்கான கோரிக்கையை கேட்க, அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார் என கூறி பதிலளிக்க மறுத்தார்.
இதனால் அமைச்சர் துரைமுருகனுடன் வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இடையே, தேவையில்லாத பிரச்சினையை உருவாக்க வேண்டாம் என்றும், யாருக்கு கேள்வி கொடுக்க வேண்டும் என்று தனக்கு தெரியும் எனவும் சபாநாயகர் கூறியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
