Wednesday, January 14, 2026

பொங்கல் பண்டிகை எதிரொலி : உளுந்தூர்பேட்டை அருகே 2 கிலோ மீட்டருக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் பொங்கல் பண்டிகை என தொடர் ஐந்து நாட்கள் விடுமுறையை அடுத்து சென்னையில் உள்ள ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டுனர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி கடந்து தான் செல்ல வேண்டும்.

இதனால் சுங்கச்சாவடியில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பாஸ்ட் ட்ராக் சற்று நேரம் திறந்த விடப்பட்ட நிலையில் வாகனங்கள் விரைந்து சென்று வருகின்றன. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.

தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கியமான சுங்கச்சாவடியாக செங்குறிச்சி சுங்கச்சாவடி விளங்கி வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் செங்குறிச்சி சுங்கச்சாவடி கடந்து சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News