Saturday, April 19, 2025

OTT யில் வெளியாகிறது `வீர தீர சூரன்’. எப்போது தெரியுமா?

எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் `வீர தீர சூரன்’. இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவேண்டிய இப்படம் பல தடைகளை தாண்டி ரிலீஸ் செய்யப்பட்டது.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் உலகளவில் ரூ.56 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் 24 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Latest news