Friday, March 14, 2025

டெல்லியில் பாஜக வென்றால் அது தேசத்துக்கே பின்னடைவு – திருமாவளவன் கருத்து

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அங்கு ஆம் ஆத்மி, பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தற்போது பாஜக 42 இடங்களிலும் ஆம் ஆத்மி 29 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. கிட்டத்தட்ட அங்கு பாஜக ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது “டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் அது தேசத்துக்கான பின்னடைவாக கருத வேண்டும். டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் தீவிரமாக சிந்தித்து ஈகோ பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டு நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவது பற்றி சிந்திக்க வேண்டும்” என பேசியுள்ளார்.

Latest news