Wednesday, January 15, 2025

விரைவில் வெளியாகும் ‘வாரிசு’ ட்ரைலர்! குஷியில் ரசிகர்கள்

‘வாரிசு’ திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்தே சுவாரஸ்யமான அப்டேட்களை படக்குழு வழங்கி வருவதால், விஜய் ரசிகர்களும் தொடர்ச்சியாக ‘தளபதி விஜய்’ ‘வாரிசு’ போன்ற hashtagகளை சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஆடியோ லான்ச் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்ட மறுநாள் ‘வாரிசு’ படத்தின் ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு  வந்தது. படத்தின் சென்சார் பணிகள் முழுமை பெற வேண்டும் என்பதே இந்த இரண்டு நாட்கள் தாமதம் ஆனதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், ஜனவரி நான்காம் தேதி ட்ரைலர் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

நான்காம் தேதி ட்ரைலர் ரிலீஸ் ஆகும் பட்சத்தில், அதற்கு பின் எட்டாவது நாளிலேயே படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

Latest news