திமுக, பாமக, நாம் தமிழர்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து சுமார் 750 பேர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கத்தில் கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் திமுக, பாமக, நாம் தமிழர்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து சுமார் 750 பேர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.அதிமுகவில் இணைந்தவர்களை எங்களில் ஒருவராக ஏற்கிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.