தவெக வில் இருந்து விலகிய வைஷ்ணவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். அதன் பிறகு சமூகவலைதளங்களில் வைஷ்ணவி தவெக மற்றும் விஜய் குறித்து அதிகளவு விமர்சித்து வருகிறார். அதேபோல தவெகவினரும் வைஷ்ணவி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தன் மீது ஆபாச கருத்துகளையும், தன் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து பரப்புவதாகவும் தவெக தொண்டர்கள் மீது வைஷ்ணவி கோவை காவல்துறையில் புகார் அளித்தார்.
இன்றைய கால கட்டத்தில் என்னை போன்ற இளம் பெண்கள் அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றனர். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தை சார்ந்த இது போன்ற நபர்களால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே தவெக தலைவர் விஜய் மீதும், தவெக தொண்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.