ஓ.பி.எஸ். ஆதரவாளராக இருந்து வந்த மனோஜ் பாண்டியன் சமீப காலமாக கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்ற மனோஜ் பாண்டியன், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்திருப்பதை குறித்து அதிமுக நிர்வாகி வைகை செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார். வைகை செல்வன் இதுதொடர்பாக கூறுகையில், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. மனோஜ் பாண்டியனை எம்.பியாக்கியவர் ஜெயலலிதா. தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார். இதெல்லாம் யாரால் வந்தது என்ற நன்றி மறந்து, பஞ்சம் பிழைக்க திமுகவிற்கு போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன்,” என்று விமர்சித்துள்ளார்.
