Monday, January 19, 2026

இந்திய அணியில் முக்கிய பதவி., வைபவ் சூர்யவன்ஷிக்கு அடித்த ஜாக்பாட்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ODI தொடரில், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஜூனியர் கிரிக்கெட் தேர்வு குழு, வரவிருக்கும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மற்றும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரண்டு தொடர்களுக்கும் இரண்டு வெவ்வேறு கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷியும், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஆயுச்ஷ் மாத்ரேவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

U19 உலக கோப்பை தொடரில் ஆயுஷ் மாத்ரே கேப்டனாக செயல்படவுள்ள நிலையில், அவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதால் இத்தொடரில் வைபவ் அணியை வழிநடத்துகிறார்

Related News

Latest News