IPL தொடரில் அதிரடியாக சதமடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ சூரியவன்ஷி, 10ம் வகுப்பு CBSE பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததாகத் தகவல்கள் பரவி வருகின்றன. 14 வயதாகும் வைபவ் இளவயதில் IPL தொடரில் களமிறங்கிய வீரராக உள்ளார்.
மிகக்குறைந்த வயது கொண்டவர் என்பதால் வைபவ்விற்கு கிரிக்கெட் லெஜெண்டுகள் பலரும் ஆலோசனை வழங்கி அவரின் வளர்ச்சிக்கு உதவி புரிந்து வருகின்றனர். குறிப்பாக ராஜஸ்தான் அணி வைபவிற்கு பக்கபலமாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் 10ம் வகுப்பு தேர்வில் சூரியவன்ஷி தோல்வி அடைந்ததாக, சமூக வலைதளங்களில் காட்டுத்தீ வேகத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக BCCI மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் உண்மையில் வைபவ் தற்போது பீஹார் மாநிலத்தை சேர்ந்த Modesty பள்ளியில், எட்டாம் வகுப்பு தான் பயின்று வருகிறார். எனவே மேற்கண்ட தகவல்களில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
சூரியவன்ஷியின் வயது குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதன் காரணமாக அவர் 10ம் வகுப்பில் தோல்வி அடைந்ததாக வெளியான தகவல்கள், இணையத்தில் வெகுவாக கவனம் பெற்று வருகிறது.