நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ திரைப்படம் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகனாக நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், ‘வா வாத்தியார்’ ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் நாளை (ஜனவரி 28) தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்டிரீமிங் ஆக உள்ளது.
