அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கும் கூடுதல் வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளார். தொடர்ந்து பல்வேறு வரிகளையும் அறிவித்து வருகிறார். அவருடைய அரசில் முக்கிய பங்கு வகிக்கும் எலான் மஸ்க்கிற்கே பிரச்சனையை கொடுத்துள்ளதாக, அவரே தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள், முக்கிய ஆட்டோமொபைல் உதிரிப் பாங்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக தற்போது ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில் “தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இந்த வரி மற்ற நாடுகளிலிருந்து வரும் டெஸ்லா காரின் உதிரிபாகங்களின் விலையை பாதிக்கும் என்றும் அந்த செலவு பாதிப்பு சாதாரணமானது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
மற்ற நாடுகளுக்கு வரிகளை போட்டு தாக்கும் டிரம்ப் கடைசியில் தன்னுடைய சொந்த நாட்டு நிறுவனத்தையே, அதுவும் தன்னுடைய அரசாங்கத்தில் முக்கிய அதிகாரியான எலான் மஸ்க்கிற்கு பாதிப்பாக முடியும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.