அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. அந்நாடு மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. வெனிசுலா ஆட்சியாளர்கள் மீது, அதிபர் டிரம்ப் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
இந்நிலையில், வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதல் காரணமாக வெனிசுலா ராணுவ தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்துவதாகவும், இந்த விவகாரத்தில் ஐ.நா. உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ வலியுறுத்தியுள்ளார்.
