அமெரிக்காவில் கடந்த அக்டோபர் 1ம் தேதி அரசாங்கம் shutdown ஆனது. இந்த shutdown இந்தியாவுக்கும், குறிப்பாக இந்தியர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அவை என்ன என்பதை பார்க்கலாம்
1. தொழில்நுட்பத் துறையில் பாதிப்பு. அமெரிக்காவில் உள்ள H-1B விசா செயலாக்கம் தடைபட்டுள்ளது. இந்த விசா இந்திய தொழில்நுட்பத் தொழிலாளர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதனால் அமெரிக்க தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இந்தியர்களின் சட்ட ரீதியாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது .
2. பொருளாதார தாக்கங்கள். அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதால், இந்திய ஏற்றுமதிகள் குறைய வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்களின் வருமானம் குறையும் அபாயம் உள்ளது.
3. பங்குச் சந்தை நிலை. அமெரிக்க பங்குச் சந்தை மூடலால், இந்திய பங்குச் சந்தையிலும் அதிர்வுகள் ஏற்படலாம். அமெரிக்க டாலரின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பை பாதிக்கலாம்.
4. கல்வி மற்றும் விசா சேவைகள். அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்கள் F-1 மற்றும் J-1 விசாக்களுக்கு விண்ணப்பிப்பதில் தாமதங்கள் ஏற்படலாம். அமெரிக்க தூதரகங்கள் சில சேவைகளை தொடர்ந்தாலும், சில சேவைகள் தடைபட்டுள்ளன.
5. அரசியல் மற்றும் வர்த்தக உறவுகள். அமெரிக்காவின் இந்தியாவுக்கு விதித்துள்ள வரிவிகிதங்கள் மற்றும் வர்த்தக தடைகள், இரு நாடுகளின் உறவுகளை பாதிக்கின்றன .
மொத்தத்தில் இந்த shutdown நீண்ட நாட்களுக்கு நீடித்தால், இந்தியாவுக்கு மேலும் பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகள் ஏற்படலாம். அதனால், அமெரிக்காவின் இந்த shutdown கூடிய விரைவில் சீரமைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.