2011ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் மோசமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு கடுமையான பனிப்புயலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்காவின் 30 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் தொடங்கிய இந்த புயல் அடுத்த ஓரிரு நாட்களில் கிழக்கு நோக்கி நகரும் என்று தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் பயணிப்பதை முடிந்தளவு தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.