உக்ரைனுக்கு மேலும் 8 ஆயிரத்து 365 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத உதவியை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கி முடிவில்லாமல் நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன.
இதில் ஜோ பைடன் தலைமையில் அமெரிக்கா, இதுவரை 5.37 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அளித்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைனின் ஆயுத பலத்தை அதிகரிக்கும் விதமாக மேலும் 8 ஆயிரத்து 365 கோடி ரூபாய் நிதியை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.