அமெரிக்காவில் படுக்கை தயாரிக்கும் காஸ்பெர் நிறுவனம், தனது படுக்கைகளை தரப் பரிசோதனை செய்ய தூங்குவதற்கு என்றே நபர்களை வேலையில் நியமிக்க உள்ளது.
ஒரு மணி நேரம் தூங்கினால் 25 டாலர் சம்பளம் உள்ள இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சவாலான சூழல்களிலும் தூங்க தயாராக இருக்க வேண்டும்.
நன்கு தூங்க விரும்புவார்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள காஸ்பெர் நிறுவனம் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு அளிப்பதோடு, பல சலுகைகளையும் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.