Wednesday, July 30, 2025

இனி PIN நம்பர் இல்லாமல் பணம் அனுப்பலாம்.., UPI சேவையில் மிகப்பெரிய மாற்றம்

PIN என்று சுருக்கமாக அழைக்கப்படும் தனிநபர் அடையாள எண்ணை (Personal identification number) உள்ளிடுவதற்கு மாற்றாக, முக அங்கீகாரம் (Facial recognition) மற்றும் கைரேகைகள் (Fingerprints) போன்ற பயோமெட்ரிக்ஸ் (Biometrics) விவரங்களை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க உதவும் புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் (Digital Transactions) 80 சதவீதத்திற்கும் அதிகமாக யுபிஐ சேவை பங்களிக்கும் இந்த நேரத்தில் என்பிசிஐ எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

சர்வர் சுமையை குறைக்கவும், யுபிஐ சேவையின் வேகத்தை மேம்படுத்தவும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களில் என்பிசிஐ (NPCI) ஆனது புதிய பயன்பாட்டு வரம்புகளை அமலுக்கு கொண்டு வருகிறது.

இந்த புதிய அம்சம், ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதில் அல்லது PIN குறியீட்டை நினைவில் கொள்வதில் சிக்கல் உள்ள கிராமப்புற அல்லது வயதான பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் தங்கள் கட்டைவிரலை வைக்க வேண்டும் அல்லது தொலைபேசியின் கேமரா திரையின் முன் கொண்டு வர வேண்டும், அப்போதுதான் பணம் செலுத்தப்படும்.

டிஜிட்டல் கட்டணங்கள் இன்னும் குறைவாக உள்ள சந்தைகள், கடைகள் அல்லது கிராமங்களில், பயோமெட்ரிக் UPI கட்டணங்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News