தற்போது உள்ள நிலவரப்படி ஒருவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மற்றொருவர் கணக்குக்கு யுபிஐ மூலம் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மட்டுமே பணம் அனுப்ப முடியும். அதேநேரம், பங்குச் சந்தை முதலீடு மற்றும் காப்பீட்டு பிரீமியம் போன்ற பரிவர்த்தனைகளை வரம்பு ரூ.2 லட்சமாக உள்ளது.
இந்நிலையில் பங்குச் சந்தை முதலீடு, காப்பீட்டு பிரீமியம் மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகைக்கான (இஎம்டி) உச்ச வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து கட்டணம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்கிறது. கடன் அட்டை நிலுவை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கான வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது. தனிநபர் மற்றொரு தனி நபருக்கு அனுப்புவதற்கான உச்ச வரம்பு ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது.
