நாடு முழுவதும் கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, யுபிஐ பண பரிவர்த்தனைக்கு கடந்த 1-ந்தேதி முதல் பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், கட்டுப்பாடுகள் அமலான மறுநாளே யுபிஐ வரலாற்றில் புதிய உச்சமாக அதாவது ஆகஸ்ட் 2-ந்தேதி 70.7 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக தேசிய பேமண்ட் கார்பரேஷன் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்தாண்டு தினசரி 100 கோடி பரிமாற்றங்கள் என்ற நிலை உருவாகும் என கணித்துள்ளது.