Wednesday, December 17, 2025

யு.பி.ஐ பரிவர்த்தனை : இதுவரை இல்லாத வகையில் புதிய சாதனை

யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் குறித்து தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதத்தில் யு.பி.ஐ. மூலமாக மொத்தம் 2 ஆயிரத்து 70 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இது செப்டம்பர் மாத கணக்கை காட்டிலும் 3.6%சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டது.

யு.பி.ஐபரிவர்த்தனை மூலமாக இதுவரை இல்லாத வகையில் 27 லட்சத்து 28 கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரியில் சீர்திருத்தம் பண்டிகை கால எதிரொலியால் யு.பி.ஐ. மூலம் பண பரிமாற்றம் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தினமும் சராசரியாக 66.8 கோடி பரிவர்த்தனைகள் யு.பி.ஐ. மூலம் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News