இந்தியாவின் யூனிஃபைடெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) திடீரென முடங்கியது. இதனால் Google Pay, PhonePe, Paytm மற்றும் SBI, ICICI, HDFC போன்ற முக்கிய வங்கிகளின் செயலிகள் உட்பட பல்வேறு டிஜிட்டல் பைமென்ட் சேவைகள் பாதிக்கப்பட்டன.
Downdetector வலைதளத்தில் 2,200-க்கும் மேற்பட்ட பயனர்கள் பண பரிவர்த்தனைகள் செய்யமுடியவில்லை என புகார் அளித்தனர். இந்த சிக்கலை விரைவில் சரிசெய்யும் பணிகள் நடந்து வருகிறது.
கிட்டத்தட்ட மூன்று வாரங்களில் இது மூன்றாவது முறையாக UPI முற்றிலும் பாதிக்கப்படுவதால், இந்தியாவின் டிஜிட்டல் பைமென்ட் உள்கட்டமைப்பின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.