டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக ஜிபே, போன்பே, உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்தி வருகிறார்கள். யுபிஐ களில் நடைபெறும் மோசடிகளை தவிர்க்கும் விதமாகவும் பயனர்களின் வசதியை மேம்படுத்தும் விதமாகவும் அவ்வப்போது புதிய அப்டேட்களை NPCI மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அக்டோபர் 1, 2025 முதல் தனிநபர்களுக்கு இடையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான ‘ கலெக்ட் ரெக்யூஸ்ட்’ அம்சத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது. மோசடி மற்றும் தவறான பயன்பாடுகளைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கலெக்ட் ரெக்யூஸ்ட் ஆப்ஷன் என்பது ஒரு நபர் இன்னொரு நபருக்கு பணம் கேட்டு கோரிக்கை அனுப்புவதாகும். இந்த வசதியை பயன்படுத்தி அதிக மோசடி நடப்பதால், கலெக்ட் ரெக்யூஸ்ட் ஆப்ஷனை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.