Monday, March 31, 2025

UPI, ATM ‘கட்டணம்’, மினிமம் Balance.. April 1ல் இருந்து ‘எல்லாமே’ மாறுது!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கிகள் தொடங்கி UPI வரை பல்வேறு திருத்தங்களை மேற்கொள்கின்றன. இவை வாடிக்கையாளரை நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வழிகளில் பாதிக்கின்றன.

என்றாலும் எங்களுக்கு கொள்கை தான் முக்கியம், மத்தது எல்லாமே நெக்ஸ்ட் தான் என்ற ரீதியிலேயே மேற்கண்ட திருத்தங்களை நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. அந்த வகையில் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் என்னென்ன திருத்தங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன என்பதை பார்க்கலாம்.

ATM பரிவர்த்தனை கட்டணங்களுக்கான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் பிற வங்கிகளில் மாதத்திற்கு 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க அனுமதிக்கப் படுவர். இதற்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 முதல் 25 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லையெனில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றன. தற்போது இந்த குறைந்தபட்ச இருப்புத்தொகையை வங்கிகள்மறுபரிசீலனை செய்து வருகின்றன. விரைவில் இதுகுறித்து வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கலாம்.

வங்கிகள் மோசடியை எதிர்த்து போராடும் வகையில் ரிசர்வ் வங்கி PBS எனப்படும் Positive Pay System முறையை அமல்படுத்தியது. நடைமுறையில் பல்வேறு வங்கிகளும் இந்த பரிவர்த்தனையை பாதுகாப்பாக மேற்கொள்ள இந்த PBS முறையை செயல்படுத்தி வருகின்றன.

இதன்படி ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் காசோலை வழங்கும் நபர்கள், தங்களின் வாடிக்கையாளர் குறித்த விவரங்களை வங்கிக்குத்  தெரிவிக்க வேண்டும். இவை வங்கித்தரப்பில் சரிபார்க்கப்படும்.

வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில் வங்கிகள் மேம்பட்ட ஆன்லைன் பாதுகாப்பு அம்சங்கள், AI Chatbotகளை அறிமுகம் செய்யவிருக்கின்றன. இத்துடன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாக்க two-factor authentication மற்றும் biometric verification போன்ற நடவடிக்கைகளும் மேம்படுத்தப்படும்.

பல்வேறு வங்கிகள் நிலையான சேமிப்புத் திட்டம் மற்றும், Fixed Depositகளுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தி வருகின்றன. SBI, IDBI, HDFC, Indian Bank மற்றும் Punjab & Sind Bank போன்ற முன்னணி வங்கிகள், கவர்ச்சிகரமான அம்சங்களுடன் ஸ்பெஷல் Fixed Deposit திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

முன்னணி வங்கிகள் பலவும் கிரெடிட் கார்டுகளுக்கான விதிகளைத் திருத்தி மாற்றி அமைத்து வருகின்றன. இது கிரெடிட் கார்டுக்கான கட்டணம் மற்றும் Rewards ஆகியவற்றை வெகுவாகப் பாதிக்கும். உதாரணமாக SBI Simply Click, Swiggyக்கு வழங்கும் Rewardஐ பாதியாகக் குறைத்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரும் ஆன்லைன் கட்டண தளமான UPI, உபயோகத்தில் இல்லாத பயனர்களின் செல்போன் எண்களை நீக்கவுள்ளது. அதாவது UPI செயலியுடன் இணைக்கப்பட்டு, நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாத மொபைல் எண்கள், வங்கிக் கணக்குகளில் இருந்து முழுவதுமாக நீக்கப்படும். இதுபோன்ற செயல் இழந்த மொபைல் எண்ணை வைத்திருக்கும், வாடிக்கையாளர் UPI சேவையை ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து பயன்படுத்த முடியாது.

Latest news