உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ராம நவமி கொண்டாடப்பட்டது. அப்போது காவிக்கொடிகளுடன் பைக்கில் பேரணி சென்ற இந்துத்துவாவினர் அங்குள்ள மசூதி மீது ஏறி அட்டகாசம் செய்தனர்.
காவி கொடிகளை அசைத்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷமிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.