உத்தரப் பிரதேசத்தில், ரசாயனத்தை பயன்படுத்தி “போலி பால்” மற்றும் பன்னீர் தயாரித்து விநியோகம் செய்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் புலந்ஷார் பகுதியை சேர்ந்த அஜய் அகர்வால் என்பவர், பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். இவரது கடை மற்றும் 4 குடோன்களில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அஜய் அகர்வால், போலி பால் உருவாக்க ரசாயனங்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இங்கு1 லிட்டர் ரசாயனம் மூலம் 500 லிட்டர் போலி பால் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுவதால் செயற்கைப் பாலை அதன் தோற்றம், சுவை அல்லது வாசனையால் யாரும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அஜய் அகர்வாலை போலீசார் கைது செய்தனர்.