Protein பவுடர்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து

309
Advertisement

நம் உடல் உறுப்புக்கள் சீராக மற்றும் ஆரோக்கியமாக இயங்குவதற்கு தேவையான அளவு புரதச்சத்து அவசியம்.

ஆனால், குறுகிய காலத்தில் உடல் எடையை கூட்ட ப்ரோடீன் பவுடர்களை அதிகமாக உட்கொள்வதால், பக்க விளைவுகள் ஏற்படலாம் என உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சருமத்தில் உள்ள எண்ணெய்பசையை அதிகரிக்கும் ப்ரோடீன் பவுடர்கள், முகப்பரு உண்டாக வழி வகுக்கிறது.

பால், இறைச்சி, முட்டை போன்ற உணவுப்பொருட்களில் கிடைக்கும் புரதம் போல் இல்லாமல், நேரடியாக புரத மாவுகளை எடுத்துக்கொள்ளும் போது, புரதச்சத்தின் அளவு மட்டும் உயர்ந்து உடலில் பிற சத்து அளவுகளின் சமநிலை பாதிக்கப்படுகிறது.

மிகுதியான புரதத்தை செரிமானம் செய்ய கல்லீரலும், சிறுநீரகமும் எப்போதும் திணறி கொண்டிருப்பதால் வயிற்று வலி வாடிக்கையாக மாற வாய்ப்பு உள்ளது.

உடற்பயிற்சி செய்துவிட்டு உடனடியாக புரத மாவுகளை உட்கொள்வதால், இரத்தத்தில் உள்ள சக்கரை அளவு உயரும் அபாயம் உள்ளது.

மேலும், ஏற்கனவே சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் புரத மாவுகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தும் மருத்துவர்கள், பக்க விளைவுகளை தடுக்க ப்ரோடீன் பவுடர்கள் பயன்படுத்துபவர்கள் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்க வேண்டும் என கருத்து தெரிவிக்கின்றனர்.