Monday, December 1, 2025

ஒரு வருஷத்திற்கு அன்லிமிடெட் கால்ஸ்! அதுவும் பட்ஜெட் விலையில்..!

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் (Airtel), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் பலரும் இன்று இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.

இதில் ஒன்றை முதன்மையாகவும் (Primary), மற்றொன்றை இரண்டாம் நிலை (Secondary) பயன்பாட்டிற்காகவும் வைத்திருப்பார்கள். ஆனால், இந்த செகண்டரி சிம்மை ஆக்டிவாக வைத்திருக்க மாதம் தோறும் ரீசார்ஜ் செய்வது பலருக்கும் பெரும் சுமையாக இருக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஏர்டெல் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மலிவு விலை திட்டங்களை வழங்குகிறது.

சமீபத்தில் டிராய் (TRAI) விதிகளின்படி, வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் நீண்ட காலத் திட்டங்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, ஏர்டெல் இரண்டு முக்கியத் திட்டங்களை முன்னிறுத்துகிறது.

இது யாருக்கெல்லாம் பொருந்தும்?

தங்கள் சிம் கார்டை வெறும் இன்கமிங் (Incoming) மற்றும் அவுட்கோயிங் (Outgoing) அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்துபவர்கள். டேட்டா (Data) பெரிதாகத் தேவைப்படாதவர்கள். ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு ரீசார்ஜ் கடையின் பக்கமே போக விரும்பாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

ஏர்டெல் ரூ.1849 ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 1849 Plan)

இதுதான் ஏர்டெல்லின் மிகவும் மலிவான வருடாந்திரத் திட்டம். இதன் சிறப்பம்சங்கள்:

  • வேலிடிட்டி (Validity): 365 நாட்கள் (முழுமையாக ஒரு வருடம்).
  • அழைப்புகள் (Calls): இந்தியா முழுவதும் எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்புகள் (Unlimited Calling). ரோமிங் கட்டணமும் கிடையாது.
  • எஸ்எம்எஸ் (SMS): மொத்தம் 3,600 இலவச எஸ்எம்எஸ்.
  • கூடுதல் சலுகை: இலவச ஹலோ டியூன்ஸ் (Hello Tunes).
  • முக்கிய குறிப்பு: இந்தத் திட்டத்தில் ‘டேட்டா (Data)’ கிடையாது. உங்களுக்கு இணைய சேவை தேவைப்பட்டால், தனியாக டேட்டா பேக் (Data Add-on) போட்டுக்கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ.2249 ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 2249 Plan)

  • வேலிடிட்டி: 365 நாட்கள்.
  • அழைப்புகள்: வரம்பற்ற இலவச அழைப்புகள்.
  • டேட்டா (Data): இந்தத் திட்டத்தில் மொத்தம் 30GB அதிவேக டேட்டா கிடைக்கும். இதை வருடம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • எஸ்எம்எஸ்: 3,600 இலவச எஸ்எம்எஸ்.
  • கூடுதல் சலுகை: இலவச ஹலோ டியூன்ஸ்.

நீங்கள் ஏர்டெல் சிம்மை முக்கியமாக அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறீர்கள் என்றால், ரூ.1849 திட்டம் மிகச்சிறந்த தேர்வு. மாதம் வெறும் ரூ.154 என்ற விகிதத்தில் உங்கள் சிம் ஒரு வருடம் முழுவதும் ஆக்டிவாக இருக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News