அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் நியூயார்க் செல்வதற்காக 104 பயணிகள், 5 பணியாளர்கள் என மொத்தம் 109 பேருடன் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் ஓடுதளத்தில் சென்ற போது விமானத்தின் இறக்கைகளின் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை ஏற்பட்டது.
இதையடுத்து விமானம் உடனே நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இதனால் பெரும் உயிர்சேதம் தடுக்கப்பட்டது. இதில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
சமீப காலமாக விமான விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதால் விமான பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.