உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவ நடவடிக்கை ஒரு மாதத்திற்கும் மேலாக தொடரும் நிலையில் இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு விரைவாக போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்பதே உலக மக்களின் எண்ணமாக உள்ளது.
இதற்கிடையில் உக்ரைனிலிருந்து தற்போது வரை 40 லச்சத்திற்கும் அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். இந்நிலையில் உக்ரைன் அதிபர் , பல்வேறு தகவல்களை நாடு மக்களிடம் பகிர்ந்துகொண்டார், அப்போது அவர் கூறுகையில் ,
இன்று ஆன்டி ஹீரோக்களுக்கு எதிராக மற்றொரு முடிவு எடுக்கப்பட்டது. தாய்நாட்டிற்கு துரோகிகளாக மாறிய இரண்டு மூத்த ஜெனரல்கள் பதவி பறிக்கப்படுகிறது.
“எல்லா துரோகிகளையும் சமாளிக்க எனக்கு நேரம் இல்லை” ஆனால் அவர்கள் அனைவரும் படிப்படியாக தண்டிக்கப்படுவார்கள்.
இரண்டு உயர் அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்ட அவர், உக்ரைனிய மக்களுக்கு விசுவாசமான இராணுவ உறுதிமொழியை மீறுபவர்கள் உயர் இராணுவ பதவிகளை இழக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
உக்ரைனின் பாதுகாப்புத்துறை பதவியில் உள்ள உயர் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்வதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.