Thursday, August 7, 2025
HTML tutorial

உக்ரைன் பெண்ணைக் கரம்பிடித்த
டெல்லி வழக்கறிஞர்

https://www.instagram.com/p/CbN7gglvUMB/?utm_source=ig_web_copy_link

ரஷ்யா உக்ரைன் போர் உக்ரமாக நடந்துவரும்
நிலையில், உக்ரைன் பெண்ணைக் காதலித்து
திருமணம் செய்துள்ளார் டெல்லி உயர்நீதிமன்ற
வழக்கறிஞர்.

டெல்லியைச் சேர்ந்தவர் அனுபவ் பாசின். 33 வயதாகும்
இவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப்
பணிபுரிகிறார். உக்ரைனைச் சேர்ந்தவர் அன்னா
ஹொரோடெட்ஸ்கா. 29 வயதான இவர் தகவல் தொழில்
நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

பணி நிமித்தம் அன்னா இந்தியாவுக்கு வந்துள்ளார்.
அப்போது இருவரும் 2020 ஊரடங்குக்கு சற்றுமுன்பு
ஒருவரையொருவர் ஒரு பயணத்தில் சந்தித்துள்ளனர்.

முதல் பார்வையிலேயே அவர்களுக்குள் காதல் அரும்பி
விட்டது. கொரோனா முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட
போது விமானங்கள் ரத்துசெய்யப்பட்டதால், சிக்கிக்
கொண்ட அன்னா தனது காதலன் அனுபவின்
வீட்டிலேயே தங்கியிருக்க நேர்ந்தது.

ஊரடங்கு முடிந்து விமானங்கள் இயக்கப்பட்டபோது
அன்னா உக்ரைனுக்குச் சென்றுவிட்டார். அதன்பிறகு
இருவரும் துபாயில் ஒன்றாக சந்தித்தனர். பின்னர்,
இருவரும் இந்தியா வந்தனர்.

அப்போது அனுபவின் பெற்றோரிடம் தங்களின்
திருமணத்துக்கு அனுமதி பெற்றனர். அதைத்
தொடர்ந்து அனுபவும் உக்ரைனில் உள்ள
அன்னாவின் வீட்டுக்குச் சென்றார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி
உக்ரைன்மீது ரஷ்யா போர்தொடுத்தபோது
அங்கிருந்து தப்பிச்செல்ல விரும்பினார். பிப்ரவரி 27
அன்று தனது தாய் மற்றும் நாயுடன் வீட்டைவிட்டு
வெளியேறினார்.

ஸ்லோவாக்கியா நாட்டு எல்லைக்குப் பேருந்தில்
சென்றார். அங்கிருந்து 2 மணி நேரம் நடந்து போலந்து
எல்லைக்குச் சென்றார். அங்கு 2 வாரங்கள் அனுபவின்
நண்பர்கள் கொடுத்த இடத்தில் தங்கியிருந்த அவர்
மினி பஸ்ஸில் போலந்துக்கு வந்தார்.

அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பத்தார்.
விசா கிடைத்ததும் இந்தியாவுக்கு வந்துவிட்டார்.

இந்தக் காதல் பறவைகள் தற்போது திருமணப் பறவைகளாகி
சிறகடித்து மகிழ்ச்சி வானில் பறக்கின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News