Wednesday, January 15, 2025

சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் வீரர்கள் ஒப்படைப்பு

உக்ரைனை சேர்ந்த 60 வீரர்கள்  மற்றும் 16 போர்க்கைதிகள்  ரஷ்யா ராணுவம் உக்ரைனிடம் ஒப்படைத்தது என உக்ரைன் தலைநகர் கீவின் துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துஉள்ளது.உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்யா தன் தாக்குதலை நிறுத்தவில்லை.

இதற்கிடையில் இராணுவ வீரர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் தங்கள் உயிரை பறிகொடுத்து வருகின்றனர்.உக்ரைனைச் சேர்ந்த மரியுபோல் நகரை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில்

உக்ரைன் ராணுவத்தினரை சரணடையும்படி  ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் போர்க்கைதிகள் 16 பேரை  ரஷியா விடுவித்துள்ளது. கடந்த செவ்வாய் அன்று ஏற்கனவே  60 பேரை சேர்த்து மொத்தமாக 76 உக்ரைன் வீரர்கள் தங்கள்  வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

மேலும் இது ஐந்தாவது முறையாக  வீரர்கள் இடம்மாற்றம் செய்யப்படுவதாகவும், உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உத்தரவின் பேரில் 30 போர்க் கைதிகளை திருப்பி அனுப்பியதாக கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது.

Latest news