Wednesday, January 15, 2025

உக்ரைன் மேயரை ரஷ்யப்படை கடத்தியதாக உக்ரைன் நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் நடத்தும் தாக்குதல் இன்று 17-வது நாளாக நீடிக்கிறது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

மனிதாபிமான அடிப்படையில் கீவ் உள்ளிட்ட 5 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்தாலும், அதையும் மீறி தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள மெலிடோபோல் மேயர் இவான் ஃபெடோரோவை ரஷ்யப் படைகள் கடத்தி சென்றதாக உக்ரைன் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

ஆயுத விநியோக பிரச்சினையை கையாளும்போது ரஷ்யப் படைகளுடன் ஒத்துழைக்க மேயர் மறுத்துவிட்டதால் 10 பேர் கொண்ட குழு அவரை சுற்றி வளைத்து கடத்தியதாக உக்ரைன் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

மேயர் கடத்தப்பட்டதை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வீடியோ பதிவு ஒன்றின் மூலம் உறுதிபடுத்தியுள்ளார்.

Latest news