உக்ரைனில் இருந்து வெளியேறிய மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். குடும்ப உறவுகளை இழந்து தவிக்கும் மக்களை ஆதரித்து அவர்களுக்கு அடைக்கலம் வழங்கிவரும் தருணம் மனதை உருக்கும் விதம் உள்ளது.
கடந்த ஒரு மாதங்களாக இணையசேவையே ஸ்தமிக்கும் அளவிற்கு உக்ரைனில் நிலவும் சூழல் தொடர்மான வீடியோகள் உலாவருகிறது . சமீபத்தில் ஸ்லோவாக்கியன் காவல்துறை தனது புகநுலில் பகிர்ந்த ஒரு வீடியோ மனதை உருக்கும் விதம் உள்ளது.
அதில் ,
அகதிகளாக எல்லைக்கு வந்த இரண்டு குழந்தைகளுக்கும் , இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கும், இடையேயான மனதைக் கவரும் தருணத்தை ஸ்லோவாக்கிய காவல்துறை படம் பிடித்து , அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துஉள்ளது.
” இது அற்புதமானது , குறைந்தபட்சம் சிறிது நேரம் குழந்தைகளின் உண்மையான மகிழ்ச்சி மற்றும் சிரிப்பு ” என்ற தலைப்புடன் பகிரப்பட்டு உள்ளது இந்த வீடியோ.
இந்த வீடியோவிற்கு பலரு உணர்ச்சிப்பூர்வமாக தங்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.